தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினால் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு 6
மாத சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் தீர்மானித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 48,542 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 41,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வும், ஏனையோருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினால் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு 6 மாத சிறைத்தண்டனை நீதி மன்றத்தால் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்