அழ்ந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன் ; பிரதமர் மஹிந்த
ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்..
ட்வீட் ஒன்றின் மூலம் கவலை தெரிவித்துள்ள அவர்,
எப்போதும் இலங்கைகைக்கு மிகுந்த மரியாதையுடன் சேவை செய்து வரும் இலங்கை போலீஸ் காவல்துறை மூலம் கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது எனவும்,
ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்ட உரிமையில் மரியாதையுடன் ஈடுபடுத்தப் பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் மேலும் தெரிவித்தார்.