ஜனாதிபதி வீடு செல்லும் வரை காலி முகத்திடல் போராட்டம் நிறுத்தப்பட மாட்டாது...!!

 
காலி முகத்திடல் அருகே கோட்டா கோ கம போராட்ட களம், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவை பதவி விலகக் கோரியே ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்க்ஷ இராஜினாமா செய்ததன் ஊடாக அமைதிப் போராட்டம் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி வீடு செல்லும் வரை அது தொடரும் எனவும் அமைதிப் போராட்டக் காரர்கள் தெரிவித்தனர்.


கோட்டா கோ கம பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஊடக மையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தி அமைதிப் போராட்டக்காரர்கள் இதனை இன்று (10) அறிவித்தனர்.


சமூக செயற்பாட்டாளர்களும் தொழிற் சங்கவாதிகளுமான ஜோஸப் ஸ்டாலின், எரங்க குணசேகர, சபீர் மொஹம்மட், பலங்கொடை ஹஸ்ஸப தேரர், லஹிரு வீரசேகர, தரிந்து உடுவகெதர உள்ளிட்டோர் அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் சார்பில் நிலைப்பாட்டை அறிவித்தனர்.