குரங்கு அம்மை - தனிமைப்படுத்தலைக் கட்டாயமாக்கிய பெல்ஜியம்

 


குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலைக் கட்டாயமாக்கபட்டுள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.


இதன்படி ,குரங்கு அம்மை நோய் தற்போது ஆப்பிரிக்காவைத் தாண்டி உலகெங்கும் உள்ள 15 நாடுகளில் பரவுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் என மொத்தம் 100 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.


அந்த நிலையில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்கிய முதல் நாடாக பெல்ஜியம் மாறியுள்ளது. அங்கு நான்கு பேருக்கு குரங்கு காய்ச்சல் பதிவாகியதை அடுத்து, 21 நாள்கள் தனிமைப்படுத்தலைக் பெல்ஜியம் கட்டாயமாக்கியுள்ளது .


அதேவேளை, இதுவரை இந்த பாதிப்புக்குள்ளானோர் யாரும் பலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் ,குரங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளானோருடன் நேரடியாக உடல்ரீதியிலான தொடர்பு கொண்டவர்கள், அறிகுறிகளை கொண்டிருந்தால் அவர்கள் அதிக ஆபத்தில் இருப்பவர்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.