ஜனாதிபதியின் பணிப்புரையை அடுத்து, வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான அறிவிப்பில் மாற்றம் செய்தது லிட்ரோ


லிட்ரோ எரிவாயுவை இன்றும் நாளையும் வீட்டு உபயோகத்திற்காக

 விடுவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.


“ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு இணங்க கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்றும் நாளையும் தினமும் 15,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என LITRO தலைவர் தெரிவித்தார்.


வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் இல்லை என்றும், தொழிற்சாலை தேவைகளுக்கு மட்டுமே எரிவாயு வெளியிடப்படும் என்றும் லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று அதிகாலை அறிவித்தது.


“கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் 15,000 எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


புதன்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் தினமும் 80,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்” என லிட்ரோ தலைவர் மேலும் தெரிவித்தார்.