கல்முனை மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் M.I.M.அப்துல் மனாப்!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கு இணங்க, கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப், நேற்று (26) தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை கட்சி தலைவரிடம் கையளித்தார்.


கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டு மே மாதத்திற்கான சபை அமர்வுடன், தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கௌரவ மேயர் அவர்களிடம் கையளித்தார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மூலம் கல்முனை மாநகர சபைக்கு தெரிவான 5 உறுப்பினர்களில் மிகவும் முன்னுதாரமிக்கவாரக அப்துல் மனாப் திகழ்ந்தார். அவர் கல்முனை மாநகர சபையில் நடைபெறும் ஊழல்களை இல்லாமல் செய்ய வேண்டும் எனும் நல்லெண்ணத்துடன், பல முயற்சிகளை இன்றுவரை செய்துவரும் ஒரு முன்னுதாரமான மனிதர்.


கல்முனை மாநகர சபையை ஊழல் இல்லாத மாநகர சபையாக கொண்டுவர வேண்டும் என்பதில், தனது மாநகர சபை உறுப்பினர் பதவிக்காலத்தை அர்ப்பணித்தவர்.


கல்முனை மண்ணை நேசிக்கும் பலரில் இவர் முன்னிலையானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மழைக்காலங்களில் மக்களின் துயர் துடைத்தது முதல், வீதி மின் விளக்குகளை தனது வட்டாரம் மட்டுமல்லாது ஏனைய வட்டாரங்களுக்கும் சாய்ந்தமருதுக்கும் சமமாக எந்தவித ஊழலும் இல்லாமல் பெற்றுக் கொடுத்தவர் . வடிகாண் துப்புரவு பணிகளிளும் கூட தனது வட்டாரத்தை தாண்டி மக்களுக்காக சேவை செய்தவர்.


கொரோனா தொற்றுக் காலங்களில், மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத்துடன் இணைந்து, கல்முனை முழுவதும் தொற்று நீக்கி தெளிக்கும் பணியில் தன்னை மக்களுக்காக அர்ப்பணித்தார்.


தனது மாநகர சபை மாதாந்த சம்பளம் மூலம், பல ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி, ஒத்தாசைகளையும் செய்தவர்.


கல்முனை மண்ணில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுகீட்டின் கீழ் பல அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்காக செய்துள்ளார்.


கல்முனை மண்ணில் மட்டுமல்லாது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்காக தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவார்.


அக்கில் ஹனீபா 

இளைஞர் அமைப்பாளர் (கல்முனை)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்