இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க 200 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – பிரதமர்


இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இந்திய உதவி திட்டத்தின் கீழ் 4,000 மெட்ரிக் டன் அரிசி, மற்றும் 500 மெட்ரிக் டன் பால் மா என்பன கிடைக்கப் பெறவுள்ளன.


குறித்த நிவாரணப் பொருட்களை கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு எதிர்காலத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


எரிவாயு பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்காக, ஒரு இலட்சம் மெட்ரிக் டன் எரிவாயுக் கொள்வனவு செய்யப்பட உள்ளது.


இதற்காக உலக வங்கியின் 70 மில்லியன் டொலரும், இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் டொலர் நிதியும் பயன்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.