கையிருப்பில் உள்ள எரிபொருள் குறித்த அறிவிப்பு


நாட்டை வந்தடைந்த டீசல் கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் கையிருப்புக்கள் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.


இதன்படி, டீசல் 18,825 மெட்ரிக் தொன், சுப்பர் டீசல் 42 மெற்றிக் தொன், 92 ஒக்டேன் பெற்றோல் 92,09 மெற்றிக் தொன், 95 ஒக்டேன் பெற்றோல் 13,067 மெற்றிக் தொன் மற்றும் விமான எரிபொருள் 386 மெற்றிக் தொன் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.