கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் அங்கியிருந்து வெளியேறியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலக்கெடு நிறைவடையும் வரையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை செயற்படுத்த வேண்டாம் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் சரணடைந்திருந்தார்.