சிகரெட் விலை உயர்கிறது


அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் இன்று (01) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், சிகரெட்டின் வகைக்கேற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


சிகரெட் வகைக்கேற்ப விலை அதிகரிப்பு குறித்து இன்று இரவு அறிவிக்கப்படும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.