120,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகம்!
சந்தைக்கு இன்றைய தினம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


இன்றைய தினமும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


நாளை முதல் ஏனைய இடங்களுக்கு எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும்.


இதன்மூலம் அதிகளவான எரிவாயு கொள்கலனை பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அதேநேரம், லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


இதேவேளை, எதிர்வரும் 16 ஆம் திகதி 3,200 மெட்ரிக் டன் லிட்ரோ எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.


எதிர்வரும் 31 ஆம் திகதி அளவில் நாட்டின் எரிவாயு தேவையை 100 வீதம் பூர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.