பிரதமர் பதவியை ஏற்க தயாராகும் - அனுரகுமார ?பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சர்வதேசத்திற்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். தற்போதைய அரசாங்கம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லை. எனவே, தற்போது நம்பிக்கை மிகுந்த நிலையானதொரு ஆட்சிக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடியும் எனவும் தெரிவித்தார்.

இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.