போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர கைது!கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார்.

இதன்போது அவருடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பத்து பேரில் ரெஹான் ஜெயவிக்ரமவும் ஒருவர்.

ஹிருணிகா தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்திக்க வேண்டும்’ என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.