கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பினால் ஒலுவில் மற்றும் பாலமுனை பிரதேசங்களில் வசிக்கும் தேவையுடைய மக்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கி வைப்பு!

 


நூருள் ஹுதா உமர்


ஒலிவில் மற்றும் பாலமுனை பிரதேசத்தில் சில இடங்களில் காணப்பட்ட குடிநீர்த் தேவையினை நிவர்த்திசெய்து தருமாறு தேவையுடையவர்கள் ரஹ்மத் பவுண்டேஷனிடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபக தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு குறுகிய நாட்களுக்குள் இக்கிணறுகளை அம்மக்களின் பாவனைக்காக  உத்தியோகபூர்வமாக திறந்து கையளித்து வைத்தார்.


இந்நிகழ்வில் பாலமுனை மக்கள் உட்பட ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


மேலும் இவ் உயரிய சேவையை செய்வதற்கு பூரண அணுசரணை வழங்கிய YWMA பேரவைக்கு தனது விஷேட நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.