காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் எடுத்த அதிரடி முடிவு

போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்து வெளியேறவும் மீண்டும் கட்டிடங்களை கையளிப்பதாகவும் காலிமுகத்திடல் போராட்ட கள ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இம்முடிவை எடுத்துள்ள போதும், ஜனாதிபதி கோட்டாபய பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் அவர்கள் பதவி விலகி, தாம் முன் வைத்துள்ள கோரிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


-காவியன்