சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் பரவல்: சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

 

இலங்கையில் தற்போது சிறுவர்களிடையே ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.


சிறுவர்களுக்கு அடிக்கடி அல்லது தொடர்ச்சியாக காய்ச்சல் நிலைமை இருக்குமாயின் மருத்துவரை நாடுமாறு விசேட மருத்துவ நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை டெங்கு மற்றும் கொவிட் தொற்று அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இது குறித்தும் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில் பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தடிமன் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்குமாயின் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளனர்.