அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்!

 

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல்!


பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளன.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். இன்றையதினம் கூட்டத்திற்கு சமூகமளிக்குமாறு கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் பொருத்தமான திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கு, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்மொழிவுகள் இக்கலந்துரையாடலின் போது எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் சட்டங்களை சீர்திருத்துவதற்கான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடலொன்றும் ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.