எரிபொருள் கப்பல்களுக்கு பணமில்லை

இரு டீசல் கப்பல்களும், மசகு எண்ணெய் ஏற்றிவந்த மற்றொரு கப்பலுக்குமான பணம் செலுத்தப்படவில்லை என்பதால், மூன்று கப்பல்களும் இலங்கைக் கடல் எல்லைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த மூன்று கப்பல்களுக்குமான முழுமையான பணத்தை செலுத்தினால் மாத்திரமே கப்பல்களில் இருந்தும் எரிபொருளை இறக்க முடியும் எனவும் தெரியவருகிறது.


இதேவேளை இக்கப்பல்களில் விமானங்களுக்கு தேவையான எரிபொருளும் இருப்பதாக கூறப்படுகிறது.