மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் மீது அநீதியான மின்சாரக் கட்டணத்தை நிவர்த்தி செய்யக் கோரி சகல மதத் தலைவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆர்ப்பாட்டம்


மத வழிபாட்டுத் தலங்களைப் பாதித்துள்ள அநீதியான மின்சாரக் கட்டணத்தை நிவர்த்தி செய்யக் கோரியும், மக்கள் மீதான மின்கட்டண சுமையை நிறுத்தக் கோரியும் எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு ,கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் ‘தெரிவித்துள்ளார்.


சகல மதத் தலைவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும், மின்சாரக் கட்டணத்தை நியாயமான முறையில் சீர்செய்யுமாறு கோரி எதிர்வரும் 21ஆம் திகதி சமயப் பிரதிநிதிகள் மின்சக்தி அமைச்சரிடம் மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளதாகவும் சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல்வாதிகள் தவறுகளுக்கு நட்டஈடாக வழிபாட்டுத் தலங்கள், ஏழைகள், சிறுதொழில்களில் ஈடுபடும் மக்கள் மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.: