Headlines
Loading...
 ரஞ்சன் குடியுரிமையையும் இழப்பார்?

ரஞ்சன் குடியுரிமையையும் இழப்பார்?

உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து, சிறைச்சாலை பஸ்ஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'துரதிஷ்டவசமாக உண்மை உரைக்கும் ஒருவர் தனித்திருக்கலாம், கண்டனங்களுக்கு ஆளாகலாம், அடிவாங்கலாம், சிறைக்குச் செல்லலாம், இறுதியில் மரணத்தையும் தழுவலாம் ஆனால், தன்னை எதிரிக்கும் தரப்பினருக்கும் தெரியும் ரஞ்சன் ராமநாயக்க என்பவர் ஒரு கிளை என்று' எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தென்னாபிரிக்காவின் முன்னான் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைச் சரித்திரத்தையும் அவர் தன்னோடு ஒப்பிட்டு சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவை, குற்றவாளியாக இனங்கண்ட உயர்நீதிமன்றம், அவருக்கு நான்கு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (12) தீர்ப்பளித்தது.

2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்த, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 'நீதிபதிகள் ஊழல் மிக்கவர்கள்' எனக் கூறியதாகவே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கோ, வேறெந்த செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கோ அவருக்கு இயலுமை இல்லை. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம், உயர்நீதிமன்றத்திடமே உள்ளது.

எனினும், தனக்கெதிரான இந்தத் தீர்ப்பு தொடர்பில், ஜனாதிபதிக்குக் கடிதமெழுதி மன்னிப்புக் கேட்கமுடியும். அவ்வாறான எவ்விதமான பகிரங்க கோரிக்கை எதையும் ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, இச்செய்தி அச்சுக்குப் போகும் வரையிலும் விடுக்கவில்லை.

ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படாது விடின், அவர் குடியுரிமையை இழப்பார்.

2

தான் சிறைக்குச் சென்றாலும் தன்னுடைய சரித்திரம் இத்தோடு முடிவடையபோவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

0 Comments: