இலங்கையின் பொருளாதாரத்தை மீள்கட்டியெழுப்ப சர்வதேசம் வழங்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று உரையாற்றினார்.


இதன்போது, கொவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீள்கட்டியெழுப்ப சர்வதேசம் வழங்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


அதேபோல், பயங்கரவாதம் என்பது உலகளாவிய ரீதியான ஒரு சவால் ஆகும், இலங்கையும் இதுபோன்ற ஒரு சவாலுக்கு முகங்கொடுத்தது.


எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற நிலைமைகளை தவிர்த்துக்கொள்ள சர்வதேச ரீதியிலான புலனாய்வுத்தகவல்களை பரிமாற்றிக்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்